மீச்சிறு பயணம்

மரணத்தை தள்ளிப் போடும்
ஒத்திகையாக
பின்பனிகாலத்தில்
கண்ணாடி திரையிட்ட
ஜன்னலோர இருக்கையில்
நல்வாய்ப்பாக இத்தருணம்
வாய்த்தது
உள்ளுக்குள்ளே புரிபடாமல்
கூடி முயங்கும் இரைச்சலான
மீச்சிறு உலகம்
வெளியேயும் புரிபடாமல்
பின்னோக்கி விரையும்
மாய காட்சிகளை கொண்ட
மீப்பெரும் உலகம்
இவ்வாறாகத்தான்
ஆகிவிடுகிறது பயணம்
மீப்பெரும் புரிதலின்மையின் ஊடாக
மீச்சிறும் புரிதலின்மையின் உடனாக

08.03.2022
பிற்பகல்

Leave a comment